பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நீத்தல் விண்ணப்பம் புலன்கள் திகைப்பிக்க யானும் திகைத்து இங்குஒர் பொய்ந் நெறிக்கே விலங்குகின்றேனை விடுதி கண்டாய் விண்ணும் மண்ணும் எல்லாம் கலங்க முந்நீர் நஞ்சுஅமுது செய்தாய் கருணாகரனே - துலங்குகின்றேன் அடியேன் உடையாய் என் தொழுகுலமே குலம் களைந்தாய் என்னைக் குற்றங் கொற்றச் சிலைஆம் விலங்கல் எந்தாய் விட்டிடுதி கண்டாய் பொன்னின் மின்னுகொன்றை அலங்கல் அம்தாமரை மேனிஅப்பா ஒப்பு இலாதவனே மலங்கள் ஐந்தால் சுழல்வன் தயி ரில்பொரு மத்துஉறவே மத்துஉறு தண்தயிரின் புலன் தீக் கதுவக் கலங்கி வித்து உறுவேனை விடுதி கண்டாய் வெண்தலை மிலைச்சிக் கொத்துஉறு போது மிலைந்து குடர் நெடுமாலை சுற்றித் தத்துறு நீறுடன் ஆரச் செம் சாந்து அணி சச்சையனே ,31 O (28) (29) (30)