பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நீத்தல் விண்ணப்பம் அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கு அஞ்சல் என்னின் அல்லால் விரைசேர் முடியாய் விடுதிகண்டாய் வெள்நகை கரும்கண் திரைசேர் மடந்தை மணந்த திருப்பொன் பதப்புயங்கா வரை சேர்ந்து அடர்ந்து என்ன வல்வினை தான்வந்து அடர்வனவே (37) அடர் புலனால் நின்பிரிந்து அஞ்சி அம்சொல் நல்லார் அவர்தம் விடர் விடலேனை விடுதி கண்டாய் விரிந்தே எரியும் சுடர் அனையாய் சுடுகாட்டு அரசே தொழும்பர்க்கு அமுதே தொடர்வுஅரியாய் தமியேன் தனி நீக்கும் தனித் துணையே (38) தனித்துணை நீநிற்க யான்தருக்கித் தலையால் நடந்த வினைத்துணையேனை விடுதி கண்டாய் வினையேனுடைய மனத்துணையே என்தன் வாழ்முதலே எனக்கு எய்ப்பில் வைப்பே 車 * தினைத்துணையேனும் பொறேன் துயர் ஆக்கையின் திண்வலையே (39) 316