பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நீத்தல் விண்ணப்பம் வலைத்தலை மான்அன்ன நோக்கியர் நோக்கின் வலையில் பட்டு மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய் வெள்மதியின் ஒற்றைக் கலைத்தலையாய் கருணாகரனே கயிலாயம் என்னும் மலைத்தலைவா மலையாள் மணவாள என் வாழ்முதலே முதலைச் செவ்வாய்ச்சியர் வேட்கை வெந்நீரில் கடிப்ப மூழ்கி விதலைச் செய்வேனை விடுதி கண்டாய் விடுக்கு ஊன்மிடைந்த சிதலைச்செய் காயம் பொறேன் சிவனே முறையோ முறையோ திதலைச்செய் பூண்முலை மங்கைபங்கா என் சிவகதியே கதி அடியேற்கு உன்கழல் தந் தருளவும் ஊன் கழியா விதி அடியேனை விடுதிகண்டாய் வெள்தலை முழையில் பதிஉடை வாள்.அரப் பார்த்து இறைபைத்துச் சுருங்க அஞ்சி மதிநெடு நீரில் குளித்து ஒளிக்கும் சடை மன்னவனே 3.18 (40) (41) (42)