பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நீத்தல் விண்ணப்பம் மன்னவனே ஒன்றும் ஆறு அறியாச் சிறியேன் மகிழ்ச்சி மின்னவனே விட்டிடுதி கண்டாய் மிக்கவேத மெய்ந்நூல் சொன்னவனே சொல்கழிந்தவனே கழியாத் தொழும்பர் முன்னவனே பின்னும் ஆனவனே இம் முழுதையுமே முழுது அயில்வேல் கண்ணியர் என்னும் மூரித்தழல் முழுகும் விழுது அனையேனை விடுதிகண்டாய் நின்வெறி மலர்த்தாள் தொழுது செல்வானத் தொழும்பரில் கூட்டிடு சோத்தம் பிரான் பழுது செய்வேளை விடேல் உடையாய் உன்னைப் பாடுவனே பாடிற்றிலேன் பணியேன் மணி நீ ஒளித்தாய்க்குப் பச்சூன் வீடிற்றிலேனை விடுதி கண்டாய் வியந்து ஆங்கு அலறித் தேடிற்றிலேன் சிவன் எவ்விடத்தான் எவர் கண்டனர் என்று ஒடிற்றிலேன் கிடந்து உள்உருகேன் நின்று உழைத்தனனே 320 (43) (44) (45)