பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினைந்தாவது திருத்தோள்நோக்கம் பிரபஞ்சகத்தி (தில்லை) (நாலடித்தரவு கொச்சகக்கலிப்பா) பூத்துஆரும் பொய்கைப் புனல்இதுவே எனக்கருதிப் பேய்த்தேர் முகக்கஉறும் பேதைகுணம் ஆகாமே தீர்த்தாய் திகழ்தில்லை அம்பலத்தே திருநடம்செய் கூத்தா உன் சேவடி கூடும் வண்ணம்தோள் நோக்கம் (1) என்றும் பிறந்துஇறந்து ஆழாமே ஆண்டுகொண்டான் கன்றால் விளவுஎறிந்தான் பிரமன் காண்புஅரிய குன்றாத சீர்த்தில்லை அம்பலவன் குணம்பரவித் துன்றுஆர் குழலினிர் தோள்நோக்கம் ஆடாமோ (2) பொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கச் செருப்பு:உற்ற சீர்அடி வாய்க்கலசம் ஊன்.அமுதம் விருப்பஉற்று வேடனார் சேடுஅறிய மெய்குளிர்ந்துஅங்கு அருள்பெற்று நின்றவா தோள்நோக்கம் ஆடாமோ (3) 482