பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. திருத்தோள் நோக்கம் கல்போலும் நெஞ்சம் கசிந்துஉருகக் கருணையினால் நிற்பானைப் போல என் நெஞ்சின் உள்ளே புகுந்தருளி நல்பால் படுத்துஎன்னை நாடுஅறியத் தான்.இங்ங்ன் சொல்பாலது ஆனவா தோள்நோக்கம் ஆடாமோ (4) நிலம்நீர் நெருப்பு:உயிர் நீள்விகம்பு நிலாப்பகலோன் புலன் ஆய மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்துநின்றான் உலகுழ்ை எனத் திசை பத்து எனத்தான்ஒருவனுமே பலஆகி நின்றவா தோள்நோக்கம் ஆடாமோ (5) புத்தர் முதல் ஆய புல்அறிவின் பல்சமயம் தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்கச் சித்தம் சிவம்ஆக்கிச் செய்தனவே தவம் ஆக்கும் அத்தன் கருணையினால் தோள்நோக்கம் ஆடாமோ (6) 484