பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. திருப்பொன்னுரசல் முன்ஈறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம் பல்நூறு கோடி இமையோர்கள் தாம்நிற்பத் தன்நீறு எனக்குஅருளித் தன்கருணை வெள்ளத்து மன்ஊற மன்னும்மணி உத்தரகோச மங்கை மின்ஏறும் மாட வியல் மாளிகை பாடிப் பொன்ஏறு பூண்முலையிர் பொன்ஊசல் ஆடாமோ (3) நஞ்சுஅமர் கண்டத்தன் அண்டத்தவர் நாதன் மஞ்சுதோய் மாட மணி உத்தரகோசமங்கை அம்சொலாள் தன்னோடும் கூடி அடியவர்கள் நெஞ்சுளே நின்றுஅமுதம் ஊறிக் கருணைசெய்து துஞ்சல் பிறப்பு:அறுப்பான் துர்ய புகழ்பாடிப் புஞ்சம்.ஆர் வெள்வளையிர் பொன்ஊசல் ஆடாமோ (4) ஆணோ அலியோ அரிவையோ என்றுஇருவர் காணாக் கடவுள் கருணையினால் தேவர் குழாம் நானாமே உய்ய ஆட்கொண்டருளி நஞ்சுதனை ஊண்ஆக உண்டருளும் உத்தரகோசமங்கைக் கோண்ஆர் பிறைச்சென்னிக் கூத்தன் குணம் பரவிப் பூண்ஆர் வனமுலையிர் பொன்ஊசல் ஆடாமோ (5) 495