பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. அன்னைப் பத்து உன்னற்கு அரியசீர் உத்தர மங்கையர் மன்னுவது என்நெஞ்சில் அன்னே என்னும் மன்னுவது என்நெஞ்சில் மால் அயன் காண்கிலார் என்ன அதிசயம் அன்னே என்னும் (6) வெள்ளைக் கலிங்கத்தர் வெண் திருமுண்டத்தர் பள்ளிக் குப்பாயத்தர் அன்னே என்னும் பள்ளிக் குப்பாயத்தர் பாய்பரி மேற்கொண்டுஎன் உள்ளம் கவர்வரால் அன்னே என்னும் (7) தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர் ஆள்எம்மை ஆள்வரால் அன்னே என்னும் ஆள்எம்மை ஆளும் அடிகளார் தம்கையில் தாளம் இருந்த ஆறு அன்னே என்னும் (8) 508