பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினெட்டாவது குயில் பத்து ஆத்தும இரக்கம் (தில்லை) (அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்) கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான் பாதம் இரண்டும் வினவின் பாதாளம் ஏழினுக்கு அப்பால் சோதி மணிமுடி சொல்லின் சொல்இறந்துநின்ற தொன்மை ஆதிகுணம் ஒன்றும் இல்லான் அந்தம் இலான் வரக்கூவாய் (1) ஏர்தரும் ஏழ்உலகு ஏத்த எவ்உருவும் தன் உருஆய் ஆர்கலி சூழ் தென் இலங்கை அழகு அமர் வண்டோதரிக்குப் பேர் அருள் இன்பம் அளித்த பெருந்துறை மேய பிரானைச் சீரியவாயால் குயிலே தென் பாண்டி நாடனைக் கூவாய் (2) 514