பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. குயில் பத்து இன்பம் தருவன் குயிலே ஏழ் உலகும் முழுது ஆளி அன்பன் அமுது அளித்து ஊறும் ஆனந்தன் வான் வந்த தேவன் நன்பொன் மணிச் சுவடு ஒத்த நல்பரிமேல் வருவானைக் கொம்பின் மிழற்றும் குயிலே கோகழி நாதனைக் கூவாய் (6) உன்னை உகப்பன் குயிலே உன்துணைத் தோழியும் ஆவன் பொன்னை அழித்தநல் மேனிப் புகழின் திகழும் அழகன் மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய தென்னவன் சேரலன் சோழன் சீர்ப் புயங்கன் வரக்கூவாய் (7) வாஇங்கே நீகுயில் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி ஒவி அவர்உன்னி நிற்ப ஒண்தழல் விண்பிளந்து ஓங்கி மேவி அன்று அண்டம் கடந்து விரிகடர்.ஆய் நின்ற மெய்யன் தாவிவரும் பரிப்பாகன் தாழ் சடையோன் வரக்கூவாய் (8) 51B