பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாவது திருப்பள்ளி எழுச்சி திரோதான சுத்தி (திருப்பெருந்துறை) (எண் சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்) போற்றிஎன் வாழ்முதல் ஆகிய பொருளே புலர்ந்தது பூம்கழற்கு இணைதுணை மலர்கொண்டு ஏற்றிநின் திருமுகத்து எமக்குஅருள் மலரும் எழில்நகை கண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றுஇதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல்சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே எற்றுஉயர் கொடிஉடையாய் எனை உடையாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே (s) அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய் அகன்றது. உதயம்நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழ நயனக் கடிமலர் மலரமற்று அண்ணல்அம் கண்ஆம் திரள்நிரை அறுபதம் முரல்வன இவை ஒர் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே அலைகடலே பள்ளி எழுந்தருளாயே (2)