பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் (III காதல் கூர்படலம்) ஏழாவது திருஎம்பாவை சத்தியை வியந்தது (திருவண்ணாமலை) (வெண்டளையான் வந்த இயற்றரவினைக் கொச்சகக் கலிப்பா) ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடம்கண் மாதே வளருதியோ வன் செவியோ நின் செவிதான் மாதேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம் மறந்து போதுஆர் அமளியின் மேல் நின்றும் புரண்டும் இங்ங்ன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே ஈதே எம்தோழி பரிசு எல் ஒர் எம்பாவாய் (1) பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம் பேசும் போது எப்போது இப் போதுஆர் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையிர் சீ சீ இவையும் சிலவோ விளையாடி ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் எத்துதற்குக் கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசனார்க்கு அன்புஆர் யாம்ஆர் எல் ஒர் எம்பாவாய் (2) 344