பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. திருப்பள்ளியெழுச்சி பப்புஅற விட்டுஇருந்து உணரும்நின் அடியார் பந்தனை வந்து அறுத்தார் அவர்பலரும் மைப்புஉறு கண்ணியர் மானுடத்து இயல்பின் வணங்குகிறார் அணங்கின் மணவாளா செப்புஉறு கமலங்கள் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே இப்பிறப்பு அறுத்துளமை ஆண்டு.அருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே (6) அது பழச் சுவை என அமுது என அறிதற்கு அரிது என எளிது என அமரரும் அறியார் இது அவன் திரு உரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டு கொண்டு இங்கு எழுந்தருளும் மதுவளர் பொழில்திரு உத்தர கோச மங்கை உள்ளாய் திருப்பெருந்துறை மன்னா எதுளமைப் பணிகொளும் ஆறு.அது கேட்போம் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே (7) முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர்மற்று அறிவார் பந்துஅணை விரலியும் நீயும் நின்அடியார் பழம்குடில் தொறும் எழுந்தருளியபரனே செம்தழல் புரை திருமேனியும் காட்டித் திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி அந்தணன்.ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் ஆர்.அமுதே பள்ளி எழுந்தருளாயே (8) 53B