பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் IV ஆட்கொண்டு அருளிய படலம் இருபத்தொன்றாவது கோயில் மூத்த திருப்பதிகம் அனாதியாகிய சற்காரியம் (தில்லை) ஆசிரிய விருத்தம் உடைய்ாள் உன்தன் நடுவுஇருக்கும் உடையாள் நடுவுள் நீஇருத்தி அடியேன் நடுவுள் இருவிரும் இருப்பதானால் அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் பொன்னம் பலத்துஎம் முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்நின்றே (s) முன்நின்று ஆண்டாய் எனைமுன்னம் யானும் அதுவே முயல்வுற்றுப் பின்நின்று ஏவல் செய்கின்றேன் பிற்பட்டு ஒழிந்தேன் பெம்மானே என்நின்று அருள் இவர நின்று போந்திடு என்னாவிடில் அடியார் உன்நின்று இவன்.ஆர் என்னாரோ பொன்னம்பலக் கூத்து உகந்தானே (2) 548