பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்து மூன்றாவது செத்திலாப் பத்து சிவானந்தம் அளவறுக்க ஒண்ணாமை (திருப்பெருந்துறை) எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் பொய்யனேன் அகம்நெகப் புகுந்து அமுதுஊறும் புதுமலர்க் கழல் இணை அடி பிரிந்தும் கையனேன் இன்னும் செத்திலேன் அந்தோ விழித்திருந்து உள்ளக் கருத்தினை இழந்தேன் ஐயனே அரசே அருள்பெரும் கடலே அத்தனே அயன் மாற்கு அறி ஒண்ணாச் செய்ய மேனியனே செய்வகை அறியேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே (1) புற்றும்ஆய் மரம்ஆய் புனல் காலே உண்டிஆய் அண்ட வாணரும் பிறரும் மற்று யாரும்நின் மலர்அடி கானா மன்ன என்னை ஒர் வார்த்தையுள் படுத்துப் பற்றினாய் பதையேன் மனம்மிக உருகேன் பரிகிலேன் பரியா உடல்தன்னைச் செற்றிலேன் இன்னும் திரிதரு தின்றேன் திருப்பெருந் துறை மேவிய சிவனே (2)