பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. செத்திலாப் பத்து ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர் நிற்க மற்றுஎனை நயந்து இனிது ஆண்டாய் காலன் ஆர் உயிர் கொண்டபூம் கழலாய் கங்கையாய் அங்கி தங்கிய கையாய் மாலும் ஒலம்இட்டு அலறும்.அம் மலர்க்கே மரக்க ணேனையும் வந்திடப் பணியாய் சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே (9) அளித்துவந்து எனக்கு ஆவஎன்று அருளி அச்சம் தீர்த்தநின் அருள்பெருங் கடலில் திளைத்தும் தேக்கியும் பருகியும் உருகேன் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே வளைக் கையானொடு மலரவன் அறியா வானவா மலை மாது ஒரு பாகா களிப்பு எலாம்.மிகக் கலங்கிடு கின்றேன் கயிலை மாமலை மேவிய கடலே (10) 576