பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. அடைக்கலப் பத்து மாழைமைப் பாவியகண்ணியர் வன்மத்து இடஉடைந்து தாழியைப்பாவு தயிர்போல் தளர்ந்தேன் தடமலர்த்தாள் வாழிஎப்போது வந்துஎந்நாள் வணங்குவன் வல்வினையேன் ஆழிஅப்பா உடையாய் அடியேன்உன் அடைக்கலமே மின்கணினார் நுடங்கும் இடையார் வெகுளி வலையில் அகப்பட்டுப் புன் கணன்.ஆய் புரள்வேனைப் புரளாமல் புகுந்துஅருளி என்கணிலே அமுதுஊறித் தித்தித்துஎன் பிழைக்குஇரங்கும் அம்கணனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே மாவடு வகிர் அன்ன கண்ணி பங்கா நின் மலர்அடிக்கே கூவிடுவாய் கும்பிக்கே இடுவாய் நின் குறிப்பு அறியேன் பாஇடை ஆடு குழல்போல் கரந்து பரந்தது உள்ளம் ஆ கெடுவேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே -590 (6) (7) (8)