பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. திருவெம்பாவை அன்னே இவையும் சிலவோ பல அமரர் உன்னற்கு அரியான் ஒருவன் இரும் சீரான் சின்னங்கள் கேட்பச் சிவன் என்றேவாய் திறப்பாய் தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகு ஒப்பாய் என்னானை என் அரையன் இன்.அமுது என்று எல்லோமும் சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ வந்நெஞ்சம் பேதையர்போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின்பரிசு ஏல் ஒர் எம்பாவாய் (7) கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும் எழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும் கேழ்இல் பரஞ்சோதி கேழ்இல் பரங்கருணை கேழ்இல் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழி எது என்ன உறக்கமோ வாய் திறவாய் ஆழியான் அன்புடைமை ஆம்ஆறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை எழை பங்காளனையே பாடு எல் ஒர் எம்பாவாய் (8) 3 5 O