பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பதாவது திருக்கழுக்குன்றப் பதிகம் சற்குரு தரிசனம் (திருக்கழுக்குன்றம்) ஆசிரிய விருத்தம் பினக்கு இலாத பெருந்துறைப் பெருமான் உன் நாமங்கள் பேசுவார்க்கு இனக்கு இலாதது ஒர் இன்பமே வரும் துன்பமே துடைத்து எம்பிரான் உனக்கு இலாதது ஒர் வித்து மேல் விளையாமல் என் வினை ஒத்த பின் கணக்கு இலாத் திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே (1) பிட்டு நேர்பட மண் சுமந்த பெருந்துறைப் பெரும் பித்தனே சட்ட நேர்பட வந்திலாத சழக்கனேன் உனைச் சார்ந்திலேன் சிட்டனே சிவலோகனே சிறு நாயினும் கடை ஆய வெம் கட்டனேனையும் ஆட்கொள்வான் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே (2) 646