பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பத்தொன்றாவது கண்ட பத்து நிருத்த தரிசனம் (தில்லை) கொச்சகக் கலிப்பா இந்திரிய வயம்மயங்கி - இறப்பதற்கே காரணம்ஆய் அந்தரமே திரிந்துபோய் அருநரகில் வீழ்வேனைச் சிந்தைதனைத் தெளிவித்துச் சிவம்ஆக்கி எனைஆண்ட அந்தம்இலா ஆனந்தம் அணிக்கொள்தில்லைக் கண்டேனே வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத் தனைச்சிறிதும் நினையாதே தளர்வுஎய்திக்கிடப்பேனை எனைப்பெரிதும் ஆட்கொண்டுஎன் பிறப்பு அறுத்த இணைஇலியை அனைத்துஉலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே 554 (1) (2)