பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. பிரார்த்தனைப் பத்து தாரா அருள்ஒன்று இன்றியே தந்தாய் என்றுஉன் தமர்எல்லாம் ஆரா நின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ சீர்ஆர் அருளால் சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா பேர்ஆ னந்தம் பேராமை வைக்க வேண்டும் பெருமானே மான்ஒர் பங்கா வந்திப்பார் மதுரக் கனியே மனம்நெகா நான்ஒர் தோளாச் சுரைஒத்தால் நம்பி இத்தால் வாழ்ந்தாயே ஊனே புகுந்த உனைஉணர்ந்தே உருகிப் பெருகும் உள்ளத்தைக் கோனே அருளும் காலம் தான் கொடியேற்கு என்றோ கூடுவதே கூடிக் கூடி உன்அடியார் குனிப்பார் சிரிப்பார் களிப்பாராய் வாடி வாடி வழிஅற்றேன் வற்றல் மரம்போல் நிற்பேனோ ஊடி ஊடி உடையாயொடு கலந்துஉள் உருகிப் பெருகிநெக்கு ஆடி ஆடி ஆனந்தம் அதுவே ஆக அருள் கலந்தே 670 (9) (10) (ii)