பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. திருப்பாண்டிப் பதிகம் நீர்இன்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சம் கொண்டீர் பார்இன்ப வெள்ளம் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார் ஒர்இன்ப வெள்ளத்து உருக்கொண்டு தொண்டரை உள்ளம் கொண்டார் பேர்இன்ப வெள்ளத்துள் பெய்கழலே சென்று பேணுமினே செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லல்மின் தென்னன்நல்நாட்டு இறைவன் கிளர்கின்ற காலம்இக் காலம்.எக் காலத்துள்ளும் அறிவுஒண் கதிர்வாள் உறைகழித்து ஆனந்த மாக்கடவி எறியும் பிறப்பை எதிர்ந்தார் புரள இருநிலத்தே காலம் உண்டாகவே காதல் செய்து உய்ம்மின் கருதரிய ஞாலம் உண்டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய ஆலம் உண்டான் எங்கள் பாண்டிப் பிரான்தன் அடியவர்க்கு மூல பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே 703 (3) (4) (5)