பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. பிடித்த பத்து அம்மையே அப்பா ஒப்பு:இலா மணியே அன்பினில் விளைந்த ஆர்.அமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெரு மானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே (3) அருள்உடைச் சுடரே அளிந்தது.ஒர் கனியே பெரும்திறல் அரும்தவர்க்கு அரசே பொருள்உடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த போகமே யோகத்தின் பொலிவே தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே சிவபெரு மானே இருள் இடத்து உன்னைச்சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே (4) . ஒப்பு:உனக்கு இல்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே மெய்ப்பதம் அறியா வீறுஇலி யேற்கு விழுமியது அளித்தது.ஒர் அன்பே செப்புதற்கு அரிய செழும்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே எய்ப்பு:இடத்து உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே (5) 718