பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. திருப்புலம்பல் சடையானே தழல்ஆடி தயங்கு மூவிலைச்சூலப் படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை விடையானே விரிபொழில்சூழ் பெருந்துறையாய் அடியேன்நான் உடையானே உனை அல்லாது உறுதுணைமற்று அறியேனே உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனிஅமையும் குற்றாலத்து அமர்ந்துஉறையும் கூத்தாஉன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துஉருக வேண்டுவனே 740