பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. சென்னிப் பத்து சித்தமே புகுந்து எம்மை ஆட்கொண்டு தீவினை கெடுத்து உய்யல்ஆம் பத்தி தந்துதன் பொன் கழல்கனே பன்மலர் கொய்து சாத்தலும் முத்தி தந்துஇந்த மூஉலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும் அத்தன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே (6) பிறவி என்னும்.இக் கடலை நீந்தத்தன் பேர்அருள் தந்தருளினான் அறவை என்றுஅடி யார்கள் தங்கள் அருள்கு ழாம்புக விட்டுநல் உறவு செய்துஎனை உய்யக்கொண்ட பிரான்தன் உண்மைப் பெருக்கம்ஆம் திறமை காட்டிய சேவடிக்கண்நம் சென்னி மன்னித் திகழுமே (7) புழுவி னால்பொதிந் திடுகு ரம்பையில் பொய்தனை ஒழி வித்திடும் எழில் கொள் சோதிஎம் ஈசன் எம்பிரான் என்னுடை அப்பன் என்றுஎன்று தொழுத கையினர் ஆகி து மலர்க் கண்கள் நீர்மல்கு தொண்டர்க்கு வழு இலா மலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே (8)