பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/500

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்பதாவது ஆனந்த மாலை சிவானுபவ விருப்பம் (தில்லை) அசிரிய விாக்கம் மின்நேர் அனைய பூம்கழல்கள் அடைந்தார் கடந்தார் வியன்உலகம் பொன்நேர் அனைய மலர்கொண்டு போற்றா நின்றார் அமரர்எல்லாம் கல்நேர் அனைய மனக்கடையாய்க் கழிப்புண்டு அவலக் கடல் வீழ்ந்த என்நேர் அனையேன் இனி உன்னைக் கூடும் வண்ணம் இயம்பாயே (1) என்னால் அறியாப் பதம்தந்தாய் யான்அது அறியாதே கெட்டேன் உன்னால் ஒன்றும் குறைவுஇல்லை உடையாய் அடிமைக்கு யார்என்பேன் பல்நாள் உன்னைப் பணிந்துஏத்தும் பழைய அடியரொடும் கூடாது என்நா யகமே பிற்பட்டுஇங்கு இருந்தேன் நோய்க்கு விருந்தாயே (2) 846