பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/502

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. ஆனந்த மாலை சீலம் இன்றி நோன்புஇன்றிச் செறிவே இன்றி அறிவுஇன்றித் தோலின் பாவைக் கூத்தாட்டுஆய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை மாலும் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறிஏற கோலம் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே கெடுவேன் கெடுமா கெடுகின்றேன் கேடு இலாதாய்ப் பழிகொண்டாய் படுவேன் படுவது எல்லாம்நான் பட்டால் பின்னைப் பயன்என்னே கொடுமா நரகத்து அழுந்தாமே காத்து ஆட்கொள்ளும் குருமணியே நடுவாய் நில்லாது ஒழிந்தக்கால் நன்றோ எங்கள் நாயகமே தாய்ஆய் முலையைத் தருவானே தாராது ஒழிந்தால் சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ நம்பி இனித்தான் நல்குதியே தாயே என்றுஉன் தாள்.அடைந்தேன் தயாநீ என்பால் இல்லையே நாயேன் அடிமை உடன்ஆக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ 848 (3) (4) (5)