பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. திருவம்மானை சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்தன் வேள்வியினில் இந்திரனைத் தோள்நெரித்திட்டு எச்சன் தலை அரிந்து அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல் தகர்த்துச் சிந்தித் திசைதிசையே தேவர்களை ஒட்டு உகந்த செம்தார்ப் பொழில் புடைசூழ் தென்னன் பெருந்துறையான் மந்தார மாலையே பாடுதும்காண் அம்மானாய் (15) ஊன்ஆய் உயிர்ஆய் உணர்வுஆய் என்னுள் கலந்து தேன்.ஆய் அமுதமும்ஆய்த் தீம் கரும்பின் கட்டியும்ஆய் வானோர் அறியா வழி எமக்குத் தந்தருளும் தேன்.ஆர் மலர்க் கொன்றைச் சேவகனார் சீர் ஒளிசேர் ஆனா அறிவுஆய் அளவு இறந்த பல்உயிர்க்கும் கோன் ஆகி நின்றவா கூறுதும்காண் அம்மானாய் (16) சூடுவேன் பூம்கொன்றை சூடிச் சிவன்திரள்தோள் கூடுவேன் கூடி முயங்கி மயங்கிநின்று ஊடுவேன் செவ்வாய்க்கு உருகுவேன் உள்உருகித் தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன் வாடுவேன் பேர்த்தும் மலர்வேன் அனல்ஏந்தி ஆடுவான் சேவடியே பாடுதும்காண் அம்மானாய் (17) 378