பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூன்முகம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டு என்பர். அவற்றுள் திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாந் திருமுறை யென்று சைவப் பெருமக்கள் கூறிவருகின்றனர். மிகப் பிற்காலத்தில் திருமுறைகண்ட புராணம் என்ற பெயரில் யாரோ ஒருவர் பல முரண்பாடுகளுடன் ஒரு நூலை எழுதினார். தம்முடைய பெயரை வெளியிடாமல், உமாபதி சிவம் அருளியது என்று கூறிவிட்ட காரணத்தால் அந்தப் புராணத்தை முழுவதாக நம்பிய சைவப் பெருமக்கள் பலர் உண்டு. வரலாற்று அடிப்படையில் பார்த்தால் மூவர் முதலிகள் அருளிச்செய்த ஏழு திருமுறைகளும், பல்லவர் காலத்திலேயே திருக்கோயில்களில் பாடப்பட்டுவந்தன என்பதை அறிய முடியும். இராசராச சோழனுக்கு எண்பது ஆண்டுகளுக்கு முற்பட்டவன் வைரமேகப் பல்லவன். இவன் காலத்திலேயே, இன்று லால்குடி என்று வழங்கப்பெறும் திருத்தவத்துறைக் கல்வெட்டில் தமிழகத்தின் திருக்கோயில்களில் தேவாரம் பாடி வந்தவர்கள் பட்டியல் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இராசராசன் தேவாரத்தைக் கண்டுபிடித்தான் என்று திருமுறைகண்ட புராணம் கூறுகின்ற கதை வரலாற்று அறிவு இல்லாத ஒருவரால் எழுதப்பட்டது என்பது தெளிவாகும். உண்மையிலேயே இராசராசன் இதைச் செய்திருந்தால் சோழர்கள்பற்றி மிக உயர்ந்த எண்ணம் கொண்டிருந்த சேக்கிழார் பெருமான்தம் பெரியபுராணத்தில் இதனைக் குறிப்பிடாமல் விட்டிருக்க மாட்டார். r எனவே, அந்தப் பழங்கதையை விட்டுவிட்டு வரலாற்று அடிப்படையில் ஆராய்வது நலம். ஏழு