பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 91 கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார் (பெ.பு. திருக்கூட்ட-8) ஆதலின் அவனை வணங்கும் வாய்ப்புப் பெற்ற இப்பிறவி வேண்டத்தக்கதுதான் என்று நினைப்பவர்கள் இவர்கள். இதனால் தாம் எடுத்த பிறப்பைப் போக்கிக்கொள்ள அவர்கள் முயல்வதில்லை. ஆனால், உயிர் வட்டத்தில் (lifecycle) இந்த அடியார்கள் இனி ஒரு பிறப்பு எடுத்து அடைய வேண்டியது எதுவும் இல்லை. எனவே, அவருடைய கடைசிப் பிறப்பை இறைவன் போக்குகிறான் என்ற கருத்தில், சிறந்த அடியார் பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் என்கிறார். இது அல்லாமல் மற்றொரு பொருளையும் சிந்திக்க இந்த அடிகள் இடந்தருகின்றன. மேலே கூறப்பெற்ற சிறந்த அடியார்கள் பிறப்பை வெறுப்பவர்கள் அல்லர் என்பதை முன்னரே கண்டோம். அப்படியானால், பிறப்பறுக்கும்’ என்பதற்கு யாருடைய பிறப்பை என்ற வினாவை எழுப்பி, விடைகாண்டல் வேண்டும். பிறந்த பிறப்பு என்பது தொடங்கி, அறுக்கும் வரையிலுள்ள தொடருக்கான நேரானபொருளை விட்டுவிட்டு, அத்தொடர் அடியார்க்கு அடியார்களைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். சிறந்த அடியார்களின் இதயகமலத்தில் இறைவன் நிற்கின்ற காரணத்தால், இந்தச் சிறந்த அடியார்களையே இறை சொரூபமாகப் பாவித்து (பெருமிழலைக் குறும்ப நாயனார் போல) தொண்டாற்றி நிற்பவர்களே அடியார்க்கு அடியாராவர். அவர்கள், தம் பிறப்பைப் போக்கிக்கொள்ள நினைப்பதில் தவறில்லை. ஆகவே, அவர்கள் விருப்பையும் நிறைவேற்றும் வகையில் இவ் அடியார்க்கு அடியாரின் பிறப்பை அறுக்கிறான் என்றும் பொருள் கொள்ள முடிகிறது. நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் (49)