பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 93 புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா........... (50–56) ஏனைய சமயங்களைப்போல அல்லாமல் இந் நாட்டில் தோன்றிய சமயங்கள் பிறவித் தொடரை நம்புகின்றன. ஆதலால், இந்தப் பிறப்பில் செய்யப்பெற்ற செயல்களின் பயன்கள் இந்தப் பிறப்பில்மட்டும் அல்லாமல் அடுத்த பிறப்பிலும் தொடரும் என்பது இந்த நாட்டுக் கொள்கை, ஆன்மாவைப் பற்றிஇருப்பவை மலங்கள் என்று சொல்லப்படும். இவை, ஆணவம், கன்மம், மாயை என்று பெயர்பெறும். மனித மனத்திற்கு ஒரு தனி ஆற்றல் உண்டு. உண்மையான நிலையை மறந்து ஒரு கற்பனை உலகில் சஞ்சரித்துக்கொண்டே, தான் இன்புற்று இருப்பதாக நினைப்பது மனத்துக்குரிய இயல்பில் ஒன்றாகும். மும்மலங்களையும் அழித்தல் என்பது இயலாத காரியம்; அவற்றை மடைமாற்றம் (transformation) செய்யத்தான் முடியும் என்று தமிழ் நாட்டார் க்ருதினர். அறியாமை காரணமாகத் தன்னை மூடியிருப்பது மாயையாகிய இருள் என்றும், அதிலிருந்து விடுபடுவதே பிறவியின் நோக்கம் என்றும் உயிர்கள் சிந்திப்பது இல்லை. தனியாக நிற்கும் ஆன்மாவுக்குச் செயல்களைச் செய்து அதன் மூலம் முன்னேறும் வாய்ப்பு இல்லையாதலால் கருணை உடையவனாகிய இறைவன் இந்த உடம்பைத் தருகிறான். உடம்பின் தன்மையைத்தான் அடிகளார் இந்த அடிகளில் கூறுகிறார். நவ துவாரங்கள் என்று சொல்லப்படும் ஒன்பது துவாரங்களையுடைய இந்த உடம்பு எலும்பு, சதை முதலியவற்றால் உள்ளே நிரப்பப்பட்டு இருப்பினும் இவை வெளியே தெரியாத வண்ணம் தோல்ால் மூடப்பட்டிருக்கும் கூடாகும். புழு அழுக்கு மூடி என்று அடிகளார் சொல்வது இறந்துபட்ட உடலிலிருந்து வெளிப்படும் புழுவைப் பற்றி மட்டும்