பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 திருவாசகம் - சில சிந்தனைகள் அல்ல. உயிருள்ள உடம்பினுள்ளேகூடப் புழுவின் வடிவிலும், கிருமிகள் வடிவிலும் கோடிக்கணக்கான உயிர்கள் இருக்கின்றன என்ற இன்றைய விஞ்ஞான உண்மையை அன்றே இவர் அறிந்திருந்தார் ஆதலின் புழு அழுக்கு மூடி” என்றார். இதனையே கிருமிச் செருவினில்’ (திருவாச:4-14) என்றும் கூறியுள்ளார் இந்த உடம்பின் துணைக் கொண்டு ஆன்மா செயலில் ஈடுபட வேண்டுமேயானால் பொறிபுலன்களின் உதவி தேவைப்படும். இந்தப் பொறிபுலன்கள் செயற்படா இடத்து எவ்வளவு வலுவுடையதாக இருப்பினும் உடம்பு நடைப்பிணமாகவே இருந்துவிடும். ஆக, உயிர்கள் செயலில் ஈடுபட வேண்டுமேயானால் உடலுக்குப் பொறி புலன்கள் தேவைப்படும். பொறிபுலன்கள் சடப்பொருள் ஆதலால், எதனையும் அனுபவிக்கும் ஆற்றல் இல்லாதவை. பொறிபுலன்கள் அனுபவத்தில் ஈடுபட வேண்டுமானால் மனத்தின் உதவி தேவைப்படுகிறது. மனம் என்பது உடலினுள் இருந்து பொறிபுலன்களை இயக்குவிக்கும் ஒரு பகுதியாகும். ஆனால், உடலினுள்ளே இருப்பினும் இந்த உடலையும், அதனோடு தொடர்புடைய பொறி புலன்களையும் ஆட்டிப்படைத்து ஏவல்கொள்ளும் இயல்பு உடையது மனம். இவ்வளவு சிறப்பான உறுப்பாயினும் இந்த மனத்திற்கு ஒரு குறை உண்டு, பிற்காலத்தார் இதனைக் குரங்கு மனம் என்று கூறினர். எந்த ஒன்றையும் பற்றி நிலைத்து நில்லாமல் தாவிக்கொண்டே இருக்கும் இயல்புடையதாதலால் 'விலங்கு மனம்’ என்றார் அடிகளார். ஆக, என்புதோல் போர்த்த உடம்பு, அதனுள் ஒன்பது துவாரங்கள், ஐந்து பொறிகள், அந்தப் பொறிகளின் வழிப்படும் ஐம்புலன்கள், இவை அனைத்தையும் ஆட்சி செய்யும் மனம் என்பவை வரிசைப்படுத்திக் கூறப்பெற்றுள்ளன. பொறிகளின் வழிப் பட்டோ, அன்றி அவற்றின் உதவி இல்லாமலோ உணர்வில் ஈடுபடக்கூடியது மனம். மிகச் சிறந்த