பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 திருவாசகம் - சில சிந்தனைகள் இந்த உடம்பு கொடுக்கப்பட்டதன் பயன் அன்பை வளர்த்து இறையருளுக்கு ஆளாகவேண்டும் என்பதே ஆகும். ஆனால், புலன்கள் வஞ்சனையைச் செய்த காரணத்தால் மனமும் விலங்கு மனம் ஆகிவிட்டது. இந்த மனம் கிடைத்ததன் பயனை ஒரு சிறிதும் பெறாமையால், 'நலத் தான் இல்லாத சிறியேற்கு நல்கி' என்றார். நல்கி’ என்ற சொல்லால் ஒரு சிறிதும் நலம் இல்லாத சிறியேனுக்கு மனத்தை அவன் கொடையாகக் கொடுத்தான் என்கிறார். எல்லாப் பண்புகளும் நிறைந்து அன்பே வடிவமாகத் திரிகின்ற கண்ணப்பர்போன்றவர் களுக்குக் காட்டிய திருவடியைத் தனக்கும் காட்டினான் என்பதை நினைக்கும்போது அடிகளார் வியப்பு எய்துகிறார். பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கின்ற அவனை அணுவிலும், அண்டத்திலும் கண்டுகொள்ளும் ஆற்றல் தம்பால் இல்லையாதலால் தம்முடைய குறையை அறிந்து இறைவன் இரக்கம் காட்டினான். அந்தக் கருனை, காரணமாக இந்த மண்ணில் தன் திருவடிகள் தோய வந்தான்; நீள் கழல்கள் காட்டினான். நீள் கழல்கள்’ என்பது வினைத்தொகை. இதனை நீண்டதிருவடிகள் என்று இறத்தகாலப் பெயரெச்சமாக்கிப் பலரும் பொருள் கூறியுள்ளனர். அவ்வாறு கொள்ளாமல், மூன்று காலத்துக்கும் உரிய வினைத்தொகையாகக் கொள்வதில் ஒரு சிறப்பைக் காணமுடிகிறது. நீண்ட கழல்கள் என்று இறந்த காலப் பெயரெச்சமாகக் கொள்ளும்போது சித்தவிட மடத்தில் சுந்தரருக்காக, அவர் தலைவைத்துப் படுத்த பல்வேறு இடங்களிலும் அவர் திருமுடிமேல் படுமாறு அன்று நீண்ட கழல்கள் என்று பொருள் கொள்ளலாம்.அன்றியும் இன மலர்கள் போது அவிழ்ந்து மதுவாய்ப் பில்கி, நனைந்தனைய திருவடி என் தலைமேல் வைத்தார் (திருமுறை : 6-14- என்று