பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 திருவாசகம் - சில சிந்தனைகள் தன் வாயின் வழியாக, வயிற்றினுள் இருந்தவற்றை வெளியே கக்கியதை திரும்ப உண்ணுகின்ற விலங்கு நாய் ஒன்றுதான். உலகியற் பொருட்களை மீண்டும் மீண்டும் அனுபவிக்கின்ற மனிதனை நாயைவிடக் கேவலமானவன் என்று கூறுவது பழைய மரபு அக் கருத்தைத்தான் இங்கு அடிகளார் நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு” என்று பேசுகின்றார். அகப்டிப்ப்ட்ட ஒருவனுக்கு மண் நிறைந்து, விண் நிறைந்து நிற்கின்ற பரம்பொருள் ஏன் தன் நீள் கழல்கள் காட்ட வேண்டும்? அது தாயன்பைவிடச் சிறந்தது ஆதலின் அதனை வியக்கும் முறையில் 'தாயின் சிறந்த தயாவான தத்துவனே என்று கூறுகிறார். மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே, தேன் ஆர் அமுதே, சிவபுரனே, - பாசம் ஆம் பற்று அறுத்துப் பாளிக்கும் ஆரியனே, நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே ஆரா அமுதே அளவு இலாப் பெம்மானே (62–67) என்ற பகுதி அடிகளார் ஆற்றாமை காரணமாக இறைவன் பெருமையை பலபடியாகக் கூறிப் புகழ்ந்ததாகும். ஒராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே (68) என்ற அடியில் ஒரு துண்மையான கருத்து அமைந்து இருத்தல் காணலாம். ஒர்தல்-சிந்தித்தல். பெரும் பாலானவர்கள் ஆழ்ந்து சிந்திக்காத காரணத்தால் உள்ளே இருக்கின்றவனைக் காண முடிவதில்லை. அவர்கள் உள்ளத்தும் ஒளித்து இருக்கிறான் என்கிறார். அப்படி யானால் காணவேண்டுமென்று ஆழ்ந்து சிந்திப்பவர்கள் முயன்றால் காண முடியுமா? முடியும் என்பதை நேரடியாகச் சொல்லாமல் வேறுவிதமாகக் கூறுகிறார் அடிகளார். ஒளிக்கும் ஒளியானே என்ற முரண்பட்ட சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் அக்கருத்தை