பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 99 அறிவிக்கின்றார். ஒளி எப்படி ஒளிந்து கொள்ள முடியும் என்றால், ஒளி ஒளிந்துகொள்ள முடியாது என்பது உண்மைதான். ஆனால், ஒளி இருப்பதை அறிந்து இடைவிடாது சிந்தனையைச் செலுத்தினால் (ஒர்ந்தால்) அவ்வொளி தானே வெளிப்பட்டு நிற்கும். உள்ளத்தின் உள்ளே ஒளி வடிவாய் நிற்கின்றவனை ஒளிக்கும்’ என்பது எப்படிப் பொருந்தும் என்றால் அது நிற்கும் நிலையை நாம் அறிந்து கொள்ள முற்படவில்லை என்பதே பொருளாகும். உள்ளத்தினுள்ளே ஒளிவடிவாய் நிற்கின்ற அவனை அறிந்து கொண்டவுடன் என்ன பயன் விளைகிறது என்பதை அடுத்து வருகின்ற அடியில் கூறுகின்றார். - நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே (69) உருகும் தன்மை ஒரு சிறிதே உள்ள மனம், திடீரென்று உருகி நீர்த்தன்மை பெற்றுவிடுகிறது. இதுவரையில் இந்த மனத்தில் இல்லாத அன்பு, அதாவது நீராய் உருகுகின்ற அன்பு இப்போது திடீரென்று கிடைத்தது எதனால்? முன்னர் ஒளியாய் நின்றவன் பின்னர் ஆருயிராய் நின்றான் என்று பேசுகின்றார். அடிகளாரின் ஆழ்மனத்தில் (சித்தத்தில் ஒளிவடிவாய்த் தனித்து நின்றவன் அடுத்து ஆருயிராக ஒன்றிவிடுகிறான். இந்த நிகழ்ச்சி எவ்வாறு நிகழ்ந்தது? அவன் ஆருயிராய் வருவதற்கு காரணமாயுள்ளது மனத்திலுள்ள அன்பு நீராய் உருகியதே ஆகும். அப்படி அது நீராய் உருக யார் காரணம்? அடிகளாரின் முயற்சியால் அது நீராய் உருகவில்லை. இறைவனே நீராய் உருக்கி, தான் வந்து தங்குவதற்குரிய இடமாகச் செய்துகொண்டான். மனத்தில், அன்பு நீராய் உருகியதால் அந்த இடம் தனக்கு ஏற்றது என்று நினைத்து ஒளிவடிவாகப் புறத்தே நின்றவன் இப்பொழுது ஆருயிராய் வந்து ஒன்றிவிட்டான். உருக்கி’