பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 திருவாசகம் - சில சிந்தனைகள் திருமுறைகள் தோன்றிய பிறகு ஒரு நூற்றாண்டு கழிந்த நிலையில் மணிவாசகப்பெருமான் அவதரிக்கின்றார். அவர் பாடியது திருவாசகமும், திருக்கோவையாரும் என்று கூறுகிறார்கள். திருக்கோவையார், திருவாசகம் பாடிய பிறகு பாடப் பெற்றது என்ற செவிவழிக் கதை ஒன்று வழங்குகிறது. பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுவாயாக’ என்று நடராசப் பெருமானே பணித்ததாக அந்தக் கதை கூறிச்செல்கிறது. இறையனுபவப் பிழியலாகிய திருவாசத்தைப் பாடிய பிற்பாடு மணிவாசகர் திருக்கோவையாரைப் பாடியிருத்தல் இயலாத காரியம். சேக்கிழார் காலத்தில் தோன்றிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகியவற்றை ஒன்பதாந் திருமுறையாக சேர்க்க முற்பட்டபோது, தேவாரம் போன்ற பக்தி இலக்கியமாகத் திருவாசகத்தை எட்டாந் திருமுறை என்று வகுத்தனர்போலும். அக்காலத்தில் திருக்கோவையாரையும் திருவாசகத்தின்பின் சேர்த்துள்ளனர். இந்தப் பிரிவினைப் பற்றி ஆராய் இது இடம் இல்லை. மூவர் முதலிகள் அருளிச்செய்த தேவாரத்திற்கும், மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகத்திற்கும் வேறுபாடுகள் நிரம்ப உண்டு. இவர்கள் அன்னவருமே மெய்யடியார்கள், இறையனுபவத்தில் தோய்ந்தவர்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இவர்களுக்குள் தாரதம்மியம் கற்பிப்பது மாபெரும் தவறாகும். அந்த அடிப்படையில் இல்லாமல், நூல்களை மட்டும் எடுத்துக் கொண்டு சிந்தித்தால், சில உண்ம்ைகள் விளங்காமற் போகாது. மூவர் முதலிகள் அருளிச்செய்த தேவாரம், இறைவனைப் புகழ்வதற்கு அக்காலத்தில் பரவியிருந்த அவன் அருட்செயல்களை ஆதாரமாகக் கொண்டது. எல்லாப் பாடல்களிலும் பெரும்பகுதி இறைவனை வருணிப்பதிலும், அவனுடைய வீரச்செயல்களை விவரிப்பதிலும் செலவிடப்பட்டது.