பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 103 இனி இந்த அடியில் அடுத்துள்ளது யாவையும் ஆய் அல்லையும் ஆம்’ என்ற தொடராகும். எல்லாமாக இருப்பவன் அவனே, இவை எல்லாம் அல்லாமல் வேறாக இருப்பவனும் அவனே என்று சொல்லும்போது ஒரு குழப்பம் வரத்தான் செய்கிறது. இருக்கின்ற எல்லாப் பொருளும் யாவையும் ஆய் அவனே உள்ளவன் என்று கூறிவிட்ட பிறகு அல்லையும் ஆம் ஆக வேறு ஒன்று இருக்க முடியுமா என்ற வினா தோன்றுவது நியாயமேயாகும். இந்த இடத்தில் உபநிடதக் கதை ஒன்று நமக்கு ஓரளவு விளக்கம் தருவதாக உள்ளது. அக்கதை வருமாறு. சீடன் ஒருவன் பலகாலம் குருவினிடம் கற்றும் தெளிவு அடையாமல், மிக சுருக்கமான வழியில் பிரம்மத்தை அறிய வேண்டும். அதற்குரிய எளிய உபாயத்தை உடனே சொல்வீர்களாக என்று ஒருநாள் குருவினிடத்துக் கேட்டான். குரு சிரித்துக்கொண்டே 'அன்னம் பிரம்மம்' என்று கூறினார். அதை முழுவதுமாக ஏற்றுக்கொண்ட சீடன் அன்னத்தை ருசி பார்க்கத் தொடங்கிச் சில மாதங்களில் தன்னுடைய உடல் எடை இரண்டு பங்கு ஆகும்படி செய்துவிட்டான். மீண்டும் குருவினிடம் வந்து அன்னத்தின்மூலம் பிரம்மத்தைக் காண முடியவில்லையே' என்று சொன்னவுடன், அவர் 'பிராணன் பிரம்மம் என்று சொல்லிக்கொடுத்தார். குருவை விட்டுச்சென்ற சீடன் பிராணாயாமம் முதலிய வற்றைப் பழகிப் பல நாழிகைகள் மூச்சை நிறுத்தும் பேராற்றலைப் பெற்றுவிட்டான். அப்போதும் அவனால் பிரம்மத்தை அறிய முடியவில்லை. மிக வருத்தத்துடன் குருவினிடம் வந்தான். குருவைப் பார்த்து, 'ஐயா உங்களால் பிரம்மத்தை காட்ட முடியவில்லை. இப்போது நான் கேட்கிறேன். நீங்கள் விடை சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு, எதிரே. உள்ள பொருளைக் காட்டி, இது பிரம்மமா? என்று கேட்டான். ஆம் என்றார் குரு. அடுத்தடுத்து எதிரே இருந்த ஒவ்வொரு பொருளையும்