பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 திருவாசகம் - சில சிந்தனைகள் சுட்டி, இது பிரம்மமா?', 'இது பிரம்மமா? என்று கேட்டுக் கொண்டே போனான். சிரிப்பு மாறாத குருவும் ஆம், ஆம்’ என்று சொல்லிக் கொண்டே வந்தார். கேள்வி கேட்கும் வேகத்தில் சீடன் தன்னுடைய வினாவையே மாற்றி விட்டான். தான் கேட்கும் வினா மாறிவிட்டது அவனுக்கே தெரியாது இது பிரம்மமா? இது பிரம்மமா? என்று கேட்டுக் கொண்டு வந்த அவன் திடீரென்று தன்னையும் அறியாமல், 'பிரம்மம் இதுவா?’ என்று கேட்டான். ஒரு விநாடிகூடத் தயங்காமல் குருநாதர் இது அல்ல- (ந + இதி = நேதி) என்று சொன்னார். தன்னுடைய கேள்வி மாறியதால் குருவின் விடை மாறியது என்பதைப் புரியாது சீடன் விழித்தான். இது பிரம்மமா? என்று கேட்பதற்கும் 'பிரம்மம் இதுவா? என்று கேட்பதற்கும் மலை போன்ற வேற்றுமை உண்டு. இரண்டாவது கேள்வி முதல் கேள்வியில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். இது பிரம்மமா? இது பிரம்மமா? என்று சீடன் கேட்டு வந்தபோது குரு ஆம், ஆம் என்று சொல்லிவந்தாரே என்றால், எல்லாப் பொருளும் பிரம்மம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் குரு ஆம் என்று சொல்லி வந்தது முற்றிலும் சரியானதேயாகும். ஆனால், கேள்வி மாறியபோது இந்த அடிப்படை மாறிவிடுகிறது. 'பிரம்மம் இதுவா?’ என்ற கேள்விக்கு குருநாதர் ஆம்’ என்று சொல்லியிருந்தால், அந்தப் பொருளைத் தவிர மற்றவை அனைத்தும் பிரம்மம் அல்ல என்று ஆகிவிடும் அல்லவா? எனவேதான் 'பிரம்மம் இதுவா? பிரம்மம் இதுவா? என்று சீடன் கேட்கத் தொடங்கியபோது, குரு, இது அல்ல, இது அல்ல என்று சொல்லத் தொடங்கினார். சீடன் கேட்ட இந்த இரண்டு கேள்விகளுக்கும் உள்ள வேறுபாட்டை விளங்கிக் கொண்டால், 'யாவையும் ஆய், அல்லையும் ஆம்’ என்று அடிகளார் கூறியதன் உட்பொருள் நன்கு விளங்கும். யாவையும் ஆய் என்ற முற்பகுதி, இது சிவ