பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 105 சொரூபமா? இது சிவ சொரூபமா? என்று கேட்கப்படும் கேள்விக்கு உரிய பதிலாகும். "ஆம், எல்லாம் சிவ சொரூபம்தான்’ என்ற விடை கிடைக்கும்; அதுதான் 'யாவையும் ஆய்’ என்பதிலுள்ள நுணுக்கம். இப்போது, கேள்வியைச் சற்று மாற்றிச் சிவ சொரூபம் இதுவா? என்று கேட்டால், 'இதுதான்’ என்றால் மற்றவை இல்லை என்று ஆகிவிடும். ஆகவே, இது அல்ல என்ற விடைதான் கிடைக்கும். எனவே அல்லையும் ஆம்’ என்று அடிகளார் சொல்வது மிக நுணுக்கமான கருத்தை விளக்குகின்ற பகுதியாகும். . சோதியனே துன் இருளே தோன்றாப் பெருமையனே (2) சோதியனே, துன் இருளே என்பது முரண்பட்ட இரண்டு சொற்களைக் கொண்ட பகுதியாகும். இதுபற்றி முன்னரே கூறப்பட்டுள்ளது. 'நமச்சிவாய' என்று முன்பு இறைவனை "ஒலி வடிவினனாகக் கூறிய அடிகளார், இங்கே சோதியன்ே’ என்பதன்மூலம் அவன் 'ஒளி' வடிவினன் என்று குறிக்கிறார். இந்த ஒளி வழிபாடு சங்ககாலம் தொட்டே இலக்கியத்தில் பயின்று வருவதைக் காண்கின்றோம். - ஒளி இருவகைத் தொழிலைச் செய்கிறது. ஒன்று தன்னையே அடையாளம் காட்டுவது. இரண்டாவது எதிரேயுள்ள பொருள்களை விளக்குவது. சுடர் வடிவாக உள்ள இறைவன் ஞாயிறு, திங்கள், அக்கினி இவற்றின் மூலம் புற உலகிலுள்ள பொருட்களை நாம் காணுமாறு செய்கிறான். சந்திரன், சூரியன் ஆகியவற்றின் கதிர் நுழைந்து செல்லமுடியாத இடத்து இருளை விலக்கஅக்கினி-விளக்குப் பயன்படுகிறது. இவற்றினிடத்தும் இருட்பகுதி உண்டு. சந்திரன், சூரியன் ஆகியவற்றின் உள்ளே இருண்ட பகுதி இருப்பதை விஞ்ஞானம் காட்டிச் செல்கிறது. இறைவனுக்கு அட்ட மூர்த்தங்கள் உண்டு