பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 107 பெருமைக்குக் காரணம் என்பதை நினைக்கின்றார் அடிகளார். அவனுடைய பெருமையை மனத்தினாலும், கற்பனையினாலும் அளவிட முடியாது ஆதலால், 'தோன்றா” என்று கூறினார். ஆதியனே அந்தம் நடு ஆகி அல்லானே (73) உலகிடை நாம் காணுகின்ற அனைத்துப் பொருள் களுக்கும் தோற்றம், இருப்பு, அழிவு என்ற மூன்று நிலை உண்டு. இன்று நம்மால் காணப்படுகின்ற நிலையில் இருப்பவை எல்லாம் என்றுமே இருந்தவை அல்ல; என்றுமே இருக்கப் போகின்ற பொருள்களும் அல்ல. அழிவுக்கு முற்பட்டு இருக்கின்ற நிலை நடுவாகி என்று குறிக்கப்பட்டது. அந்தம்’ என்பது முடிவு நிலை. நடுவு, அந்தம் ஆகிய இரண்டு நிலைகளிலும் இல்லாத பொருளே உலகில் இல்லை. என்றும் உள்ளதாகக் கூறப்படும் இப் பிரபஞ்சம்கூட இந்த வடிவத்தில் Ա6ն) கோடி ஆண்டுகளாக இருந்து வருகிறது. பின்னர் இவ்வடிவம் மாறித் துகள்கள் ஆகிச் சென்று, மறுபடியும் உற்பத்திக் காலத்தில் பல வடிவங்களைப் பெறுகின்றது என்பதை நாம் அறிவோம். இந்தத் தேர்ற்றம், இருப்பு, அழிவு என்ற மூன்று நிலைகளுக்கு அப்பாற்பட்ட சடப்பொருள் எதுவும் இல்லை. அப்படியானால், இந்தப் பொருள்களின் தோற்றத்திற்கும், இருப்புக்கும், அழிவிற்கும் யார் காரணம்? சடப்பொருளாகிய இப்பிரபஞ்சம் தானே தோன்றி, இருந்து, அழியும் இயல்பைப் பெற்றிருக்கவில்லை. எனவே, இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கு ஒரு கர்த்தா வேண்டும். அந்தக் கர்த்தாவே இறைவன் என்று சொல்லப்படுகிறான். இறைவன் என்ற சொல்கூட இருத்தல்-தங்குதல், நிலை பெறுதல்-என்ற பொருளின் அடிப்படையில் பிறந்த சொல்லாகும். ஆகவே இவை அனைத்தையும் தோற்று வித்து, காத்து, அழிக்கின்ற ஒருவனை 'ஆதியன்’ என்று குறிப்பிடுவது சாலப் பொருத்தமுடையதாகும். -