பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 109 பார்த்து வாங்க வேண்டும் என்பதுதான். திருப்பெருந்துறை எல்லையில் ஒரே விநாடியில் அவர் எல்லாவற்றையும் துறக்க நேரிடுகிறது. இது அவராக விரும்பி, நீண்ட நாளாகச் சிந்தனை செய்து ஏற்றுக்கொண்ட முடிபா என்றால், இல்லை என்று உறுதியாகக் கூறலாம். ஆகவே, மதுரையிலிருந்து துறை முகப்பட்டினமாகிய தொண்டி செல்கின்ற அமைச்சரை வழியே குருந்த மரத்தடியில் இருக்கின்ற ஒருவர் ஈர்த்துக் கொண்டார். கை தட்டியோ, ஒரு பணியாளை அனுப்பியோ அழைக்கவில்லை. இவை செய்யப் பெற்றிருந்தால் திருவாதவூரர் அழைக்கப்பட்டார் என்று சொல்லலாம். ஈர்த்தல்’ என்பது இவ்விரண்டு. செயல்களிலும் மாறுபட்ட ஒன்றாகும். காந்தத்தின் எதிரே வைக்கப்பெற்ற இரும்பு கொஞ்சம் கொஞ்சமாக நகர்கிறது. நகர்கிறது என்ற எண்ணம் இரும்புக்கு இல்லவே இல்லை. ஆனால், காந்தம் எவ்விதப் புறச்செயலுமின்றி இரும்பை இழுக்கின்றது. அந்த இரும்புக்குத் தன்னைத் தடுத்து நிறுத்திக்கொள்ளும் ஆற்றல் இல்லை. காந்தத்தின் வலுவுக் கேற்ப இரும்பு மிக விரைவாகச் சென்று காந்தத்துடன் ஒட்டிக்கொள்கிறது. அதேபோலத் திருவாதவூரருடைய உள்ளத்தில் துறவுபற்றிய எந்த எண்ணமும் இல்லாத நிலையில் எங்கோ இருக்கின்ற குரு அவரை ஈர்க்கின்றார். காந்தம் இழுப்பது இரும்புக்குத் தெரியாததுபோல இங்கேயும் தாம் இழுக்க்ப்படுவதை அமைச்சராகிய வாதவூரரும் முதலில் அறியவில்லை. எல்லாம் நடைபெற்ற பிறகு நினைத்துப் பார்க்கின்றார். அமைதியாக இருந்து நினைக்கும்போதுதான் தம்மையும் அறியாமல் தாம் ஈர்க்கப்பட்டது நினைவுக்கு வருகிறது. ஆகவே, பல்லாயிரக் கணக்கானவர்கள் வாழ்கின்ற இந்த உலகில் தம் ஒருவரை மட்டும் ஈர்த்து அருள் செய்த ஒருவரை 'எந்தை' என்று கூறியது மிகவும் பொருத்தமுடையதாகும். ஆனால், எந்தை என்று சொல்லக்கூடிய அந்த உறவுமுறை காரணமாக