பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 திருவாசகம் - சில சிந்தனைகள் குருவின் பெருமையை உணராதவராக அடிகளார் ஆகிவிடக்கூடும். அந்தத் தவறும் நிகழாமல் இருப்பதற் காகத்தான் பெருமானே’ என்றார். அவர் செய்தது ஒரு தந்தை செய்த காரியம். எனவே, எந்தை என்று அறிவித்தார். ஆனால், இறைவன் உலகிடை அப்படிப் பட்ட தன்மை உடையவனாக இருப்பதோடு மட்டும் அல்லாமல் கற்பனை கடந்து நிற்கின்றவன் ஆதலாலே 'பெருமானே’ என்று முடிக்கின்றார். கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின் நோக்கு அரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் : ஞானம் இருவகைப்படும். ஒன்று அபர ஞானம். மற்றொன்று பரஞானம், பரஞானம் இறைவனோடு ஒட்டியது. அபரஞானம் என்பது இப்பிரபஞ்சத்தைப் பற்றியது. பரஞானத்தை மெய்ஞ்ஞானம் என்று கூறும் பழக்கம் உண்டு. காரணம், இறைவன் ஒருவனே மெய்ப்பொருள். எனவே அவனைப் பற்றி அறியக்கூடிய ஞானம் மெய்ஞ்ஞானம் என்று கூறப்பட்டது. இந்த மெய்ஞ்ஞானம் திடீரென்று வருவதும் உண்டு; தோன்றி வளர்வதும் உண்டு. திருஞானசம்பந்தர் போன்றவர்களுக்கு உள்ளுணர்வாக ஒரே விநாடியில் மெய்ஞ்ஞானம் பிறந்தது. அடிகளாருக்கும் குரு தரிசனம் கிடைத்தவுடன் மெய்ஞ்ஞானம் கிடைத்தது என்பது உண்மைதான். அப்படியானால் ‘கூர்த்த மெய்ஞ்ஞானம் என்று சொல்ல வேண்டிய கார்ணம் என்ன ? அபரஞானம்கூடப் பருப்பொருள்பற்றி அறிவின் துணைக்கொண்டு ஓரளவு அறியவும், உணர்வின் துணைக்கொண்டு ஓரளவு அறியவும் தொடக்கத்தில் இடம் தருகிறது. ஆனால், இந்த நிலையில் அனுபவம் என்பது ஏற்படுமா என்பது சிந்தனைக்குரியது. மெய்ஞ்ஞானம் தோன்றி, வளர்ந்து, முதிர்ந்த நிலையில்