பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூன்முகம் 3 திருஞானசம்பந்தரைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு பத்துப் பாடல்களையும் அடுத்துப் பதினோராவது பாட்டில் இப்பாடல்களைப் பாடுபவர் இன்ன பயனைப் பெறுவர் என்று கூறுவதைக் காணலாம். சைவ சமயக் குரவர்கள் நால்வர், பன்னிரண்டு ஆழ்வார்கள் ஆகிய அனைவரிலும் திருஞானசம்பந்தரும், நம்மாழ்வாரும் மட்டுமே, பலஸ்ருதி' என்று சொல்லப்படும் பதினோராவது பாடலில், மேலே உள்ள பத்துப் பாடல்களைப் பாடுபவர் இன்ன பயனைப் பெறுவர் என்று கூறிச்சென்றுள்ளனர். இதிலிருந்து ஒன்றைத் தெரிந்துகொள்ளலாம். இவர்கள் இருவரும் மூன்று வயதில் LITL–#5 தொடங்கியவர்கள். இவர்கள் வயதை நோக்கும்பொழுது, இவர்கள் தம் அறிவாற்றலைமட்டும் கொண்டு பாடினார்கள் என்று சொல்வதற்கில்லை. இறையருள் பூரணமாக இருவரையும் ஆட்கொண்ட காரணத்தால், இவர்கள் வாயிலிருந்து வரும் சொற்கள் இறைவன் சொற்களே ஆகும் என்று இருவரும் கூறியுள்ளனர். திரு இலம்பையங்கோட்டுர்த் தேவாரத்தில், எனது உரை தனது உரையாக (திருமுறை:1-76-3) என்று திருஞானசம்பந்தர் கூறுகிறார். இதேபோல நம்மாழ்வாரும், என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை இன்தமிழ் பாடிய ஈசனை - (நாலா : 2832) என்றும், - : என்நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இருந்தமிழ்நூல் இவை மொழிந்து - - - நாலா :3132) என்றும், கடவுளைக் கூறியிருப்பது சிந்திப்பதற்குரியதாகும். மேலேயுள்ளபாடல்கள், இவர்களுடைய பாடல்களல்ல