பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 111 தான் அனுபவம் ஏற்படுகிறது. ஆகவே, கூர்த்த மெய்ஞ் ஞானம் (கூர்மைப்பட்ட மெய்ஞ்ஞானம் என்பதை அனுபவம்வரை வளர்ந்துவிட்ட இறை அறிவு அல்லது ‘மெய்ஞ்ஞானம்' என்று கூறுவதில் தவறு இல்லை என்று தோன்றுகிறது. இங்கே கூறிய முறையிற்றான் இறை அனுபவம் வந்தது என்பதை அறிவுறுத்த, பின்னேவரும் 'உணர்வார் என்ற சொல் உதவி செய்கின்றது. பழுத்த அந்தச் சிவஞானம் முழுவதுமாக அவரை ஆட்கொண்டு உணர்வு வடிவாக அவரை மாற்றிவிடுகிறது. அவ்வாறு மாறிவிட்ட நிலையில் இந்த அனுபவம், அனுபவத்தைப் பெறுகின்ற ஆன்மா, அனுபவத்தின் முதற் பொருளான இறைவன் என்ற மூன்றும் மறைந்து அனுபவம் ஒன்றுமட்டுமே நின்றுவிடுகிறது. எனவே, அதனை அனுபவிக்கின்ற ஒருவன், அனுபவத்தில் மூழ்கிவிட்ட காரணத்தால், தான் இல்லாமற் போய் விடுகிறான். ஆகவே, கர்த்தா என்பவன் மனஉறுதி கொண்டு உணரத் தொடங்கி, அந்த உணர்வேமயமாக மூழ்கிவிடுகிறான். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக அந்த உணர்வு நிலையிலிருந்து வெளிவருகிறான். முழுவதும் வெளிவந்த நிலையில் தன்னை மூழ்கடித்த உணர்வைத் திரும்பிப் பார்த்து அதனை விவரிக்கத் தொடங்குகிறான். இவ்வாறு சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. மனித மனவியலை ஆராய்ந்த இன்றைய மனவியலார் பின் வருமாறு கூறுவர். எந்த ஓர் உணர்வும், அது எவ்வளவு ஆழமாக இருப்பினும், ஒரேயடியாக இருபத்துநான்கு மணி நேரமும் ஒருவரைப் பற்றிநிற்றல் என்பது இயலாத காரியம். ஆகவே, ஓர் உணர்வுக்குத் தோற்றம், வளர்ந்த நிலை, அடங்கிவிடுகிற நிலை என்ற மூன்று பகுதிகள் உண்டு. அடிகளார் 'கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார்’ என்று கூறுகிறபோது அந்த முதிர்ந்த, வளர்ந்த நிலை குறிப்பிடப்படுகிறது. அந்த அனுபவ நிலை இப்போது மறுபடியும் இறங்கியே ஆகவேண்டும். அப்படி