பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 திருவாசகம் - சில சிந்தனைகள் இறங்கத் தொடங்கும்பொழுது அனுபவிப்பவன் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவத்திலிருந்து வெளிவருகிறான். ஆற்று நீருள் நடப்பட்டு இருக்கிற ஒரு கம்பின் மேற்பகுதி முதலில் தெரிகிறது. வெள்ளம் பெருகும்போது, அந்தக் கம்பு மூழ்கிப்போகிறது. கம்பு இருக்கிறதா, இல்லையா என்று சொல்ல முடியாதபடி அது வெள்ளத்துள் மூழ்கியுள்ளது. வெள்ளம் வடியத் தொடங்கியவுடன் கம்பு மறுபடியும் தலை நீட்டி வெளியே வருவதுபோல, இங்கே அனுபவத்தின் முதிர்ச்சியில், தான்’ என்ற ஒன்றை அறவே இழந்துவிட்ட பக்தனுக்கு, பிறகு அந்த அனுபவ உணர்வு குறையக் குறைய அவனுடைய 'தான்' வெளிப்படுகிறது. அப்படி வெளிப்படுகின்ற நிலையில்தான் தற்போதம் தோன்றுகிறதாதலானும், அது தோன்றியபின் அதற்கொரு கருத்துத் தோன்றுமாதலானும் இதனையே தம்கருத்தின் என்று அடிகளார் கூறுகிறார். அனுபவம் நிறைந்து நிற்கும்போது தம் கருத்து’, என்ற ஒன்று இல்லை. அனுபவம் வடியத் தொடங்கியபோது தான்', "தன்னுடைய கருத்து என்ற இரண்டும், வெள்ளம் வடியும் போது வெளிப்படும் கம்புபோல, வெளிப்படுகிறது. இந்தக் கருத்து வெளிப்பட்டவுடன், அதுவரை தன்னை மூழ்கடித்திருந்த அனுபவத்தைப்பற்றி, இந்தக் கருத்தே ஆராயத் தொடங்குகிறது. அனுபவத்தை ஆராய முடியுமா என்று கேட்டுப் பயன் இல்லை. அது எப்படி இருந்தது என்று நினைத்துப் பார்க்கும் முயற்சிதான் அது. அதனை அமைதி நிலையில் பழைமையைச் சிந்தித்தல் (remembering in.tranquility) என்று மேல்நாட்டார் கூறுவர். அனுபவத்தில் இருந்து வெளிப்பட்ட கருத்து அந்த அனுபவத்தை முன்னும் பின்னும் ஆராயத் தொடங்குகிறது. தன்னுடைய தொலைநோக்கால் இந்த அனுபவத்தை ஆராய்ந்து அதற்கு ஒரு வடிவு கொடுக்க முயல்கிறது. - அனுபவத்தைப் பெற்றவன் அனுபவத்திலிருந்து மீண்டு, தன்னுடைய அனுபவத்தை ஆராயத் தொடங்கி,