பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 திருவாசகம் - சில சிந்தனைகள் மனத்தில் தோன்றும் உணர்வுகளை அனுபவிப்பது சிற்றுணர்வே அந்த மனம் அனுபவிக்கின்ற இன்பம் சிற்றின்பம்என்றே கூறப்படும். சிற்றுணர்வை அனுபவித்துப் பழகிய மனம் பேருணர்வாகிய இறை அனுபவத்தில் மூழ்கும் நிலை தோன்றும்போதுகூடத் தன்னுடைய இயல்பை மறப்பது இல்லை. சிற்றின்பத்தைப் பற்றி அமைதி நிலையில் ஆராய்வதுபோலப் பேரின்பத்தைப் பற்றி ஆராய முற்படுகிறது. அப்படிப்பட்ட நிலையை எடுத்துக் கூறவந்த அடிகளார் இரண்டு சொற்களின் மூலம் இது நடவாத காரியம் என்பதைக் குறிப்பிடுகிறார். உணர்வை இரண்டாகப் பிரிக்கின்றார். உலகியல்பற்றித் தோன்றுகிற உணர்வுகள் சாதாரண உணர்வுகள். அவை நுண்மையானவை அல்ல. ஆனால், இறையுணர்வு மிகமிக நுண்மையான உணர்வாகும். இதைவிட நுணுக்கமானது வேறு ஒன்றும் இல்லை என்பதையும் நுணுக்கு அரிய’ என்ற சொல்லால் அடிகளார் குறிப்பிட்டுள்ளார். இறையனுபவம் மிக நுண்மையான உணர்வாதலால் கருத்தளவில் அதனைப் பற்றி அறியவோ, ருசிக்கவோ, எடுத்துக் கூறவோ முடியாது என்பதையும் நுண் உணர்வே என்ற சொற்கள் மூலம் தெரிவித்துவிடுகிறார். போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே (77) என்பது அடுத்து நிற்கும் அடியாகும். இவ்வாறு இறைவனைக் குறிப்பதில் ஒரு முக்கியத்துவம் அமைந்து உள்ளது என்பதை அறிதல் வேண்டும். ஆறு அறிவு படைத்த மனிதன் தன் அறிவின் முதிர்ச்சியில் சில மெய்ம்மைகளைக் காண முடிகின்றது. எவ்வளவு அறிவு வளர்ந்துவந்தாலும் சில அடிப்படைகளை மாற்ற முடியாது. சூரியனின் தோற்றம், மறைவு; சந்திரனின் வளர்ச்சி, தேய்வு என்ற இவற்றைத் தொடக்கத்தில் உண்மை என்றே நினைத்தான். அறிவு வளர்ந்த நிலையில் சூரியன் கிழக்கே தோன்றி, மேற்கே மறைகிறான் என்ற