பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 115 பழைய அறிவு பொருளற்றது என்பதை உணர்கிறான். கிழக்கு என்றும், மேற்கு என்றும் இரண்டு திசைகள் இல்லை. சூரியன் தோன்றுவதும் இல்லை; மறைவதும் இல்லை. மறைவது போல ஒரு தோற்றம் ஏற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்கிறான். ஆனால், எவ்வளவு அறிவின் துணைக்கொண்டு இதனை அறிந்தாலும் சூரியன் தோன்றி மறைகிறான் என்ற அந்த அடிப்படை நினைவு மாறுவது இல்லை. அதுபோல, போதல்’ என்றால் தான் இருக்கும் இடத்திலிருந்து ஒரு பொருள் நீங்கித் துரத்தே செல்லுதல் என்ற பொருளையும், வருதல்’ என்றால் தூரத்தே இருக்கின்ற பொருள் தன்னை நோக்கி வருதலையும் இந்த அடிப்படை அறிவு கற்பனை செய்து கொள்கிறது. தூரத்தே இருக்கின்ற விண்மீன்கள் மிக நீண்ட தூரத்தில் இருக்கின்ற காரணத்தால் நம்முடைய கண்ணுக்குச் சிறியனவாகப் புலப்படுகின்றன. ஆனால், அவை ஒவ்வொன்றும் உண்மையில் சூரிய மண்டலத்தை விடப் பல மடங்கு பெரியவை. அதேபோலப் போதல், வருதல் என்பவை ஒப்புநோக்குச் சொற்கள். உண்மையில் போதல், வருதல் ஆகிய இரண்டு செயல்களும் நடைபெறுவதில்லை என்பதை நாளாவட்டத்தில் புரிந்து கொள்ள முடியும். நம் இளமைக் காலத்தில், இறைவன் எங்கோ இருக்கிறான்; நாம் நல்வினைசெய்து, வீடுபேற்றை அடையவேண்டுமானால் அவன் இருக்கின்ற கயிலையம் கிரிக்கு இறந்த பிறகு போகவேண்டும் என்று பிறர் சொல்லக் கேட்கிறோம். அதேபோல அடியார்களுக்கு அருள்செய்வதற்காக இறைவன் கயிலையிலிருந்து புறப் பட்டு, மானிட உருத்தாங்கி வருகிறான் என்று புராணக் கதைகள் சொல்லக் கேட்டதால், போதல், வருதல் என்ற இரண்டுக்கும் அவ்வாறே பொருள் கண்டு பழகி விட்டோம். போதல், வருதல் ஆகிய இரண்டு தொழிலுக்கும் இத்தொழிலைச் செய்கின்ற கர்த்தா ஒருவன்