பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 117 புணர்ந்தான் என்று சொல்வது பொருத்தமில்லை ஆதலால் புணர்வும் இலாப் புண்ணியன்’ என்றார். காக்கும் எம் காவலனே காண்பு அரிய பேரொளியே ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடரொளியாய் சொல்லாத நுண் உணர்வாய் (78–80) உலகிடை வாழும் உயிர்கள் அனைத்தும் ஒரு சட்ட திட்டத்திற்கு உட்பட்டே வாழ்க்கை நடத்துகின்றன. இயற்கையினுடைய சட்டதிட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் முன்னேற முடியும், அவற்றை மீறினாலோ அல்லது அவற்றுக்குக் கட்டுப்பட மறுத்தாலோ விளைவு அல்லல்தான். காவலன் (அரசன்) என்பவன் சில சட்டத்திட்டங்களை ஏற்படுத்தி அவற்றுக்கு உட்பட்டு வாழுமாறு நம்மைப் பணிக்கிறான். நாம் எவ்வித அல்லலுமின்றி வாழ்வதற்கு இந்தச் சட்டதிட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் காவல் துறையினர் இல்லாத இடங்களில், சாலையின் குறுக்கே செல்லக்கூடாது என்ற அறிவிப்புப் பலகை உள்ள இடத்திற்கூடச் சாலையைக் கடக்கிறோம். சிவப்பு விளக்கைக்கூட மதிக்காது காரில் கடந்துவிடுகிறோம். அரசின் ஆணை எந்த நேரத்திலும், எல்லா இடத்திலும் செல்லுபடியாகக் கூடியது என்பதை நாம் மறந்துவிடுகிறோம். அரசன் நேரடியாக இருந்து ஆணை செலுத்தவேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. அதைக் கூறவந்த திருத்தக்கதேவர் சிந்தாமணியில், உறங்கு மாயினும் மன்னவன்தன் ஒளி கறங்கு தெண்திரை வையகங் காக்குமால் (சிந்தா : 248)