பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 திருவாசகம் - சில சிந்தனைகள் “, என்று கூறினார். தம்மைப்போன்ற மனிதனாகிய அரசனுக்குக்கூட இத்துணைஅளவு அதிகாரம் உண்டு என்றால் பிரபஞ்சம் முழுவதையும், படைத்து, காத்து, அழிக்கின்ற பரம்பொருளுக்கு எத்துணைப் போதிகாரமும், பேராறிலும் இருக்கும் தாம் ஒவ்வொரு விநாடியும் உயிருடன் இருக்கிறோம் என்றால், அவன் ஒவ்வொரு விநாடியும் நம்மைக் காக்கிறான் என்பது விளங்கும். கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் தம்மை அழிப்பதற்கு என்றே நம்முள்ளும், நம்மைச் சுற்றிலும், தண்ணீரிலும், காற்றிலும் நிறைந்துள்ளன. அவற்றையும் மீறி நாம் எவ்வாறு வாழ முடிகிறது? இங்கேதான் இறையருள் தோன்றாத் துணையாக இருந்து நமக்கு உதவுகிறது. காவலனை நாம் அறிந்து கொள்ளாவிட்டாலும் அவன் நம்மை விடுவதில்லை. காத்தல் தொழிலைத் தன் கருணை காரணமாக் அவன் செய்து கொண்டேயிருக்கிறான் என்பதை அறிவிப்பான் வேண்டி காக்கும் எம் காவலன்' என்றார். - - அடுத்து நிற்பது காண்பரிய பேரொளியே என்பது ஆகும். காணுதல் என்ற தொழிலைக் கண்ணும் செய்கிறது. மனமும் செய்கிறது. மனத்தின் உதவி கொண்டுதான் கண் செய்கிறது. ஆனால், கண்ணின் உதவி இல்லாமலும் மனம் செய்யும். ஒளி என்ற ஒன்று இருப்பின் அதை உணர்த்துவது கண்தான் என்று நாம் நினைக்கின்றோம். ஆனால், ஆழ்ந்து சிந்தித்தால் அது சரியானதன்று என்பது விளங்கும். எனவே கண்ணால் காணுகின்ற ஒளி, மனத்தால் காணுகின்ற ஒளி என்ற இரண்டை நாம் அறிய முடியும், கண், மனம் என்ற இரண்டையும் தாண்டி நிற்கின்றவன் இறைவன். ஆதலால், அவனைக் காண்டல், கடினம் என்பது விளங்கும் காண்பரிய என்பதால் ஒருவேளை அவன் இருள் வடிவினனோ ব্যঞ্জg ஐயுறுவாருக்கு, அவர்களது தவறை எடுத்துக்கூறுவதுபோல