பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 119 அவன் பேரொளி வடிவினன் என்கிறார். பேரொளி என்றால் அது எப்படிக் கண்ணுக்கும், மனத்திற்கும் புலனாகாமல் போய்விடும் என்ற வினா தோன்றுகின்றது அல்லவா? சாதாரண ஒளிக்கும் பேரொளிக்குமுள்ள வேறுபாடு அதுதான். சாதாரண ஒளி - சூரிய ஒளி போன்றவை - கண், மனம் என்ற இரண்டுக்கும் உட்பட்டதேயாகும். ஆனால், பேரொளி வடிவினனான இறை சொரூபம் கண், மனம் இரண்டுக்கும் அப்பாற்பட்டது என்பதைக் குறிக்க 'காண்பரிய” பேரொளி என்றார். ஆற்று இன்ப வெள்ளமே என்பதற்கு ஆற்றில் வரும் வெள்ளம் போன்ற இன்பம் என்று பொருள்கொள்வது ஓரளவு பொருத்தமுடையதுதான். ஆற்று வெள்ளம், இன்பம், துன்பம் இரண்டையும் செய்யும், வெள்ளத்தின் பயனை உடனே காணாவிட்டாலும், நீர்ப் பெருக்குக் காரணமாக வேளாண்மை செழித்தலின் வெள்ளம் நல்லது தான். வெள்ளம் வரும்போது மக்களுக்கும், பயிர்களுக்கும் அழிவு ஏற்படுகிறதர்தலால் ஓரளவு தீமையும் அதன்பால் உள்ளது. எனவே, ஆற்று வெள்ளம் அந்த நேரத்தில் துன்பம் தந்து, பின்னர் நல்ல பயனை விளைக்கின்றது. ஆனால் இறையனுபவம் அனுபவிக்கின்ற அந்த நேரத்திலும் இன்பமானதே. பின்னரும் நற்பயன் விளைத்தலின், ஆற்று வெள்ளம் என்பதன் இடையே 'இன்ப என்ற ஒரு சொல்லை பெய்வதன் மூலம் இக் கருத்தைப் பெற வைக்கிறார் அடிகளார். ஆற்றில் தண்ணிர் ஒடும்போது இரு கரைகளுக்கும் உட்பட்டுத்தான் செல்லும். வெள்ளம் வரும்போது கரைகள் உடைந்து ப்ோகின்றன. அதுபோல, பொறி புலன்கள் அனுபவிக்கும் இன்பங்கள் ஒர் எல்லைக்கு உட்பட்டவை. அது ஆற்றில் ஒடும் சாதாரண நீர்பெருக்குப்